2025 பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்புகள் உண்டு. குழந்தைக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத தெய்வ தரிசனம் அமையும். நீங்கள் நினைப்பது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் உழைத்து சம்பாதிக்கும் சம்பாத்தியங்கள் உங்கள் கையில் பணமாகவோ, தனமாகவோ இருக்கும். வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ் அத்தனைக்கும் வாய்ப்புகள் உள்ளன. தொழில் சுமாராக உள்ளது. தேவையற்ற வார்த்தைகளை விடாதீர்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் பிரத்யங்கிரா தேவியையும் வழிபாடு செய்யுங்கள்.
