2025 ஜனவரி 21-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
மகிழ்ச்சி, சந்தோஷம், எண்டெர்டெயின்மெண்ட், டூர், எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆகியவை இருக்கிறது. பேச்சின் மூலமாக சம்பாதிப்பவர்களுக்கு நல்ல வருமானம் உண்டு. ஆனால், அந்த வருமானங்கள் கிடைப்பதில் நிறைய தடைகள் இருக்கிறது. இடம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இந்த வாரம் இருக்கிறது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். வேலை நன்றாக உள்ளது. பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். வழக்குகள் மட்டுமின்றி உங்களின் நேரடியான, மறைமுகமான எதிரிகளை ஜெயிப்பீர்கள். எல்லோரையும் வெற்றி கொள்வதற்கான வாய்ப்பு நிறைய உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டுமே சுமார். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் பணங்கள் வராமல் இருந்தால் வரும். இந்த வாரம் முழுவதும், சிவன் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கும் மகாலட்சுமியை தரிசனம் செய்யுங்கள்.
