2025 ஜனவரி 07-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. அதற்கான சிகிச்சை எடுப்பவர்களுக்கும் வெற்றி கிடைக்கும். வேலை, வாய்ப்புகளை பொறுத்தவரையில், ஒருபக்கம் வேலை இருக்கிறது; இன்னொரு பக்கம் பார்க்கும் வேலையில் பிரச்சினை, வேலையை விடவேண்டிய சூழ்நிலை ஆகியவை இருக்கின்றன. வேறு அலுவலகம், வேறு வேலை மாற வாய்ப்புள்ளது. வேலை நிமித்தமாக எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் ஒருபக்கம் நன்மை, இன்னொரு பக்கம் பிரச்சினைகள் எல்லாம் கலந்து உள்ளது. அதனால் எந்த துறையில் இருந்தாலும் கவனமாக இருங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சுமாராக இருக்கிறது. உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. கல்வியில் கவனம் செலுத்துங்கள். இல்லையென்றால் பிரேக் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. அந்த காதலில் முதலில் தடைகள் ஏற்பட்டாலும், இறுதியில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள், புகழ், வருமானம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், சிவன் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.