2024 டிசம்பர் 31-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், தெய்வ அனுகூலம், நீண்ட தூர பயணம், எதிர்பாராத தெய்வ தரிசனம் ஆகியவை இருக்கிறது. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது நிறைய இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் உங்கள் கையில் பணம் நிற்க வாய்ப்புகள் இல்லை. எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது. முயற்சிகள் வெற்றியடைய வாய்ப்புகள் இல்லை. வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. எதிர்பார்த்த முன்னேற்றம் உள்ளது. பணி உயர்வு, சம்பள உயர்வுக்கு வாய்ப்புகள் உள்ளன. எதிரிகளை ஜெயிப்பீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். தொழில் பரவாயில்லை. நல்ல நட்பு கிடைக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், ஆஞ்சநேயர் மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.