2024 டிசம்பர் 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு இறையருளால் குழந்தை பாக்கியம் உண்டு. உங்கள் கையில் பணம், தனம், பொருள் இருக்கும். சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகளுக்காக செலவு செய்வீர்கள். காதல் விஷயங்கள் வெற்றி அடையும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் மற்றும் லாபம் இருக்கிறது. அம்மாவால் ஆக வேண்டிய காரியங்கள், அவரால் நற்பலன்கள் அத்தனையும் கிடைக்கும். சொத்துக்களை விற்பதில் கவனம் தேவை. தொழில், மணவாழ்க்கை மற்றும் கணவன் - மனைவி உறவு ஆகியவை சுமாராகதான் உள்ளது. உயர்கல்வி பரவாயில்லை. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்றாக உள்ளது. நிலுவையில் உள்ள பணங்கள் வராமல் இருந்தால் வரும். பெரிய அளவில் பண்ணக்கூடிய முயற்சிகள் ஒருபக்கம் நன்மை; இன்னொரு பக்கம் சுமார். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வந்துசேரும். இந்த வாரம் முழுவதும், தன்வந்திரி பகவான் மற்றும் சிவனை வழிபாடு செய்யுங்கள்.