2024 டிசம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் கையில் பணம், தனம், பொருள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. பேச்சின் மூலம் வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம் இருக்கிறது. சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் அதை கொஞ்சம் தள்ளிப் போடுங்கள். ஏனென்றால், இந்த நேரத்தில் நீங்கள் வாங்கும் அந்த சொத்து நீண்ட காலம் நிலைத்து இருக்க வாய்ப்பில்லை. உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், எதிர்பாராத ஆலய தரிசனம், தெய்வ தரிசனம் என்பது இருக்கிறது. மணவாழ்க்கையை பொறுத்தவரை மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. வேலை, வாய்ப்புகள் பிரமாதமாக இருக்கிறது. வேலையில் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு இருக்கிறது. பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ் எதிர்பார்ப்பவர்களுக்கு அது கிடைக்க வாய்ப்புள்ளது. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றமான காலமாக இருக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருக்கின்றன. எதிர்பாராத ஆலய தரிசனம் அமையும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும், சனிபகவான் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள்.