2024 டிசம்பர் 03-ஆம் தேதி முதல் டிசம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது இருக்கும். கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்லிசிட்டி, தொண்டர்களின் அன்பு, ஆதரவு இருக்கிறது. சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் கொஞ்சம் காத்திருங்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், லாட்டரி, ரேஸ், டிஜிட்டல் கரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவிலேயே செய்யுங்கள். நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். வேலை, வாய்ப்புகள் பிரமாதமாக இருக்கிறது. கண்டிப்பாக ஏதோவொரு வேலை உண்டு. வேலை தேடுபவர்களுக்கு வேலை உண்டு. ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பணி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை உண்டு. போட்டித் தேர்வுகள் எழுதி இருந்தால் வெற்றி பெறுவீர்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வழக்குகள் இருந்தால் அவற்றில் இருந்து விடுபட, ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டுமே நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும், சிவன் கோயிலில் இருக்கக்கூடிய நந்திகேஸ்வரரை வழிபாடு செய்யுங்கள்.