2024 நவம்பர் 05-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் செலவினங்கள் இருக்கிறது. தெய்வ அனுகூலம் உண்டு. ஆலய தரிசனம், தெய்வ தரிசனம் அமையும். மத ஈடுபாடு அதிகரிக்கும். இறையருளால் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். வேலை நன்றாக உள்ளது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பதற்கான வாய்ப்பு; போட்டித்தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். அவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. தொழில் பரவாயில்லை. நண்பர்களால் நற்பலன்கள், மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது இருந்துகொண்டே இருக்கும். புதிய காதல் மலரும். ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்படும். யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீர்கள். அவை திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து உண்டு. இந்த வாரம் முழுவதும் பெண் தெய்வ வழிபாட்டை அதிகப்படுத்துங்கள்.
