2024 அக்டோபர் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நன்றாக இருக்கும். கையில் பணம், தனம், பொருள் இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். நீங்கள் நம்பியவர்கள் நன்மையைச் செய்வார்கள். இறைவனுடைய அனுக்கிரகம் பரிபூரணமாக இருக்கிறது. தொடர்பு கொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். எதிர்பாராத பயணத்தால் நன்மைகள் இருக்கின்றன. நெருங்கிய உறவுகளால் நன்மைகள்; இளைய சகோதர - சகோதரிகளுக்காக செலவு செய்ய வேண்டிய காலமாகவும் இருக்கிறது. இடம், வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத தெய்வ தரிசனம் இருந்துகொண்டே இருக்கிறது. கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து, வருமானம் இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிஜிட்டல் கரன்சி, ரேஸ், லாட்டரி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். எதிர்பாராத என்டெர்டெயின்மென்ட், டூர் இருக்கிறது. உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. வேலையும் நன்றாக உள்ளது. புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலித்தால் உங்கள் காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியும். இந்த வாரம் முழுவதும் சிவன் தரிசனம் அவசியம்.
