2024 செப்டம்பர் 03-ஆம் தேதி முதல் செப்டம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. ஆனாலும், உங்கள் சம்பாத்தியத்துக்கு ஏற்ற செலவுகளும் நிறைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மைகள் இருக்கிறது. சொத்துக்கள் விற்பனை ஆகாமல் இருந்தால் விற்பனையாகும். இளைய சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, நன்மை ஆகியவை இருக்கின்றன. கிரக நிலைகள் நன்றாக இருப்பதால் எதிர்காலத்திற்கான விஷயங்களை இப்போதே பிளான் செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் மற்றும் சொந்த தொழில் ஆகியவை நன்றாக உள்ளது. திருமணம் நடைபெறாமல் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும். வேலையை பொறுத்தவரை அரசு, தனியார் என எந்த துறையில் பணியாற்றினாலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இல்லையென்றால் வேலையில் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும். உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு தர வாய்ப்புகள் இல்லை. அதனால் வேலையில் நிறைய பிரச்சினைகள், போராட்டங்கள், மன உளைச்சல்கள், நிச்சயமற்ற தன்மைகள் போன்ற அனைத்தும் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் சிவன் மற்றும் பெருமாளை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 9 Sept 2024 9:57 PM IST
ராணி

ராணி

Next Story