2024 ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், எண்டெர்டெயின்மென்ட், எதிர்பாராத டூர், டிராவல் இருக்கிறது. அதற்கு தகுந்த பொருளாதாரமும் இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், அவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இது அத்தனையும் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை எந்த துறையில் பணியாற்றினாலும் அதில் கவனம் செலுத்துங்கள். கவனமாக இருங்கள். உங்கள் வேலையில் கடின முயற்சி எடுத்தால் மட்டுமே அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். அதேபோன்று வேலையில் உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு தர வாய்ப்புகள் இல்லை. அதனால் எல்லாவற்றிலும் கவனமாக இருப்பதோடு கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்யுங்கள். இந்த வாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அவை திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. மண வாழ்க்கையில் கணவன் - மனைவிக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் அதன் காரணமாக பிரிவு, பிரச்சினை, போராட்டம் ஆகியவை இருக்கிறது. உங்கள் உயர் கல்வியில் தடை, வெளிநாட்டு தொடர்புகளில் பிரச்சினை, பாஸ்போர்ட், விசா வருவதில் சிக்கல் உள்ளிட்டவை இந்த வாரம் இருக்கிறது. அப்பா, அண்ணன், ஆண் நண்பர்கள் ஆகியோரால் நற்பலன்கள் உள்ளது. இந்த வாரம் முழுவதும் சிவ தரிசனம் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கும் தாயாரையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 13 Aug 2024 9:30 AM IST
ராணி

ராணி

Next Story