2024 ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக உள்ளது. புதிய முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். எண்ணங்கள் வித்தியாசமாக இருக்கும். தேடுதல் என்பது பெரியளவில் இருக்கும். அஷ்டம சனி நடக்கிறது என்று மெத்தனமாக இருக்க வேண்டாம். மற்ற கிரகங்களும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் சொத்துக்கள் ஏதும் விற்காமல் இருந்தால் நிச்சயம் நல்ல விலைக்கு போகும். இடம், வீடு மாற நினைத்தவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் ஆகியவை செய்பவர்களுக்கு நன்றாக உள்ளது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கல்வியில் கவனம் செலுத்துங்கள். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள், கேடயங்கள் இருக்கிறது. அரசாங்க உதவிகள் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி மற்றும் வருமானங்களும் இருக்கிறது. பெரிய அளவில் நோய், கடன் ஆகியவை இருந்தால், நோயின் தன்மை மற்றும் கடன் குறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கும். பெரிய அளவில் உடல் உழைப்பு இல்லாமல் சம்பாதிக்க ஆசைப்படுவீர்கள். அதற்கு ஏற்றார் போலத்தான் கிரகங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கின்றன. வேலையை பொறுத்தவரை எந்த துறையில் பணியாற்றினாலும் நன்றாக உள்ளது. சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டுமே நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும் நரசிம்மரையும், தன்வந்திரி பகவானையும் தரிசனம் செய்யுங்கள்.

Updated On 20 Aug 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story