2024 ஜூலை 09-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் எண்ணங்கள், ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். மூத்த சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், நெருங்கிய நண்பர்களால் நற்பலன்கள் ஆகியவை உண்டு. பொருளாதாரத்தில் பிரச்சினைகள் ஏதும் இல்லை என்றாலும், நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணங்கள் செலவினங்கள் ஆவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். எதிர்பாராத பயணம் இருக்கிறது. உங்களை பெரிய அளவில் புதுப்பித்துக் கொள்வதற்கான சூழ்நிலைகள் இருக்கின்றன. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றை செய்பவர்களுக்கு அந்த துறை கொஞ்சம் பரவாயில்லை. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. அம்மாவின் அன்பு, ஆதரவை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கிடைத்தாலும், அதற்காக கடுமையாக போராட வேண்டிய காலகட்டங்கள் இருக்கின்றன. உங்களை அறியாத மகிழ்ச்சி, எண்டெர்டெயின்மென்ட், டூர் ஆகியவை இருந்துகொண்டே இருக்கும். அதற்காக நிறைய செலவு செய்வீர்கள். ஷேர் மார்க்கெட், டிஜிட்டல், மீடியா போன்ற எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. சம்பள உயர்வு, பணி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. வேலையில் பெரிய அளவில் முயற்சி எடுத்து செய்யும் பொழுது உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பாராத பண வரவு, பொருள் வரவு ஆகியவை இருக்கின்றன. இந்த வாரம் முழுவதும் பெருமாள் மற்றும் பிரத்தியங்கரா தேவியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 8 July 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story