2024 ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகளை பொறுத்தவரை எதிர்பாராத செலவினங்கள் உண்டு. அதனால் கையில் பணம் இருக்கும்போதே ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வது நல்லது. அப்படி முதலீடு செய்யும்போது ரிட்டன்ஸ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் முதலில் வெற்றி பெறுவதுபோன்ற சூழல், பின்னர் தடைகள் என அனைத்தும் இருப்பதால் பெரியளவில் எதையும் செய்ய வேண்டாம். இந்த வாரம் கிரக நிலைகள் எதுவும் சரியாக இல்லாததால் புதிய பழக்கவழக்கங்கள், முயற்சிகள் எதுவும் வேண்டாம். எல்லாவிதமான உறவுகளோடும் நட்பை பலப்படுத்துங்கள். ஏனென்றால் அவர்களால் தேவையற்ற பிரச்சினைகள், மனவருத்தங்கள் இருந்துகொண்டே இருக்கும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மை உண்டு. வீடு, இடம் விற்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலை வாய்ப்பை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேலையில் நல்ல முன்னேற்றங்கள் உண்டு. சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டுமே நன்றாக உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப் போன்றவற்றுக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் முழுவதும் சிவ தரிசனமும், பெருமாள் வழிபாடும் பிரதானமாக செய்து வருவது நல்லது.

Updated On 25 Jun 2024 12:14 AM IST
ராணி

ராணி

Next Story