2024 அக்டோபர் 01-ஆம் தேதி முதல் அக்டோபர் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் முயற்சி ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது ஆகிய மூன்று கிரகங்கள் இருப்பதால் எந்த வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு அஷ்டமத்து சனி இருந்தாலும், இன்னொரு பக்கம் குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்க்கையில் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ, அது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில், வேலை எதுவாக இருந்தாலும் எவ்வளவுக்கு எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ, கண்டிப்பாக அதற்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். தொடர்புகொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் செய்பவர்கள் அனைவருக்கும் நன்றாக உள்ளது. கமிஷன், ஏஜென்சி, புரோக்கர் ஏஜென்ட், காண்ட்ராக்ட், கன்சல்டன்சி தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோசம் உண்டு. இளைய சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. சொத்துக்கள் எதிர்பார்த்த விலைக்கு போகும். டாக்குமெண்டில் பிரச்சினைகள் இருந்தால் சரியாகும். வேலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வேலை, வருமானம் இருந்தாலும், இன்னொரு பக்கம் நீங்கள் பார்க்கும் வேலையை விட்டு வெளியேற்றப்பட வேண்டிய காலகட்டங்கள் இருக்கின்றன. உங்களின் நட்பு வட்டாரத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம்; குறிப்பாக, பெண் நண்பர்களால் நற்பலன்கள் உண்டு. இந்த வாரம் முழுவதும், பைரவரையும், ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்யுங்கள்.

Updated On 7 Oct 2024 11:55 PM IST
ராணி

ராணி

Next Story