2024 செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் நினைப்பது நடக்கும். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள், முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியடைய வாய்ப்புள்ளது. உங்களை நீங்களே புதிப்பித்து கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும். படிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. நீங்கள் யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் தொடர்புகொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக விற்பனையாகாமல் இருக்கும் சொத்துக்களும் விற்பனையாக வாய்ப்புள்ளது. அப்பா மற்றும் அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். கல்வியும் சிறப்பாக உள்ளது. கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி இருக்கிறதே என்று பயப்பட வேண்டாம். வர வேண்டிய சொத்துக்கள், முன்னோர்களுடைய சொத்துக்கள், மனைவி மூலமாக பொருள் வரவு ஆகியவை இருக்கின்றன. பென்ஷன், பிஎப், இன்சூரன்ஸ், கிராஜுட்டி என எதெல்லாம் உங்களுக்கு வரவில்லை என்று நினைக்கிறீர்களோ அதெல்லாம் வரும். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். எதிர்பார்த்து காத்திருக்கும் செய்திகள் நன்மையாக வரும். இந்த வாரத்தில் உங்களுக்கு தேவை தைரியம், தன்னம்பிக்கை. வாரம் முழுவதும் பைரவரையும், ஆஞ்சநேயரையும் பிரதானமாக வழிபாடு செய்யுங்கள்.

Updated On 24 Sept 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story