2025 ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் 2025 மே 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எதிர்பாராத தெய்வ அனுகூலம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. வேலையில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றங்கள் இருக்கிறது. பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ், போனஸ், மானிட்டரி பெனிஃபிட்ஸ் என எதிர்பார்க்கும் அத்தனையும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். சக தொழிலாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். கடன் கிடைக்கும். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபத்தை அடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நிலுவையில் உள்ள பணங்கள் வந்து சேரும். பெரிய அளவில் வெற்றிகள் உண்டு. நிறைய கற்றுக் கொள்வீர்கள், சம்பாதிப்பீர்கள். குழந்தை பாக்கியம், குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், நன்மை உண்டு. இந்த வாரம் முழுவதும் பிரம்மா மற்றும் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யுங்கள்.
