2025 மார்ச் 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உயர்கல்வி நன்றாக உள்ளது. உயர்கல்விக்கு வெளியூர், வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்யும் அனைவருக்கும் தொழில் நன்றாக உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் லாபம், வருமானங்கள் உண்டு. நிலுவையில் பணங்கள் ஏதும் இருந்தால் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத பயணம் இருக்கிறது. அந்த பயணத்தால் மகிழ்ச்சி, நன்மை உண்டு. தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். ஏனென்றால் உங்கள் பணம் முடங்க வாய்ப்புள்ளது. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. வேலை வாய்ப்புகள் நன்றாக உள்ளது. வேலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ் என எதிர்ப்பார்ப்பவர்களுக்கு அனைத்தும் உண்டு. பெரிய அளவில் நோய் இருந்தால் அதன் தன்மையில் இருந்து விடுபடுவீர்கள். கடன் குறைவதற்கான அறிகுறிகள் ஏற்படும். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய காதல் மலரும். இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள்.
