2025 மார்ச் 18-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தெய்வ அனுகூலம் உண்டு. உங்கள் தொழில் லாபத்தை கொடுப்பதாக இருக்கும். வராத பணங்கள் வந்து சேரும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு அல்லது அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான சூழ்நிலைகள் நல்லவிதமாக அமையும். உங்கள் கையில் பணம், தனம் என்பது இருக்கும். தேவையில்லாத பயணங்கள் வேண்டாம். தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் எவ்வளவு தூரத்திற்கு சுறுசுறுப்பாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு நல்லது. தேவையில்லாத சிந்தனைகளை தவிருங்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். நோய், கடன் இரண்டும் குறையும். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. அதனால் கொஞ்சம் கவனமாக இருங்கள். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. உங்கள் வேலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. தொழிலில் ஏற்றம், முன்னேற்றம் உண்டு. இந்த வாரம் முழுவதும் நவகிரகங்களில் இருக்கக்கூடிய சனிபகவான் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 17 March 2025
ராணி

ராணி

Next Story