2025 மார்ச் 11-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலை மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். முயற்சிகள் பெரிய அளவில் கைகூடும். எதிர்பாராத பயணம் இருக்கிறது. அந்த பயணம் நன்மையாக இருக்கும். சனிப்பெயர்ச்சி வருவதால் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமும், முன்னேற்றமும் நடைபெற இருக்கிறது. தொழில் நன்றாக உள்ளது. உங்கள் தொழிலில் நல்ல லாபத்தை சம்பாதிப்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில்களும் நல்ல லாபத்தை கொடுக்கும். நிலுவையில் உள்ள பணங்கள் தவணை முறையில் வந்து சேரும். அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவி உறவு பரவாயில்லை. இந்த வாரம் முழுவதும் ஆஞ்சநேயர் மற்றும் முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள்.
