2025 பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
8-ஆம் இடத்தில் சூரியன், சனி இருப்பதால் ஒருபக்கம் நன்மை, இன்னொரு பக்கம் சுமாரான பலன்கள். நிலுவையில் உள்ள பணங்கள் வந்து சேரும். முன்னோர்களுடைய சொத்துக்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். பென்ஷன், பிஎஃப், கிராஜுவிட்டி ஆகியவை வராமல் இருந்தால் வரும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலித்தால் திருமணம் நடைபெறும். காதலில் பிரிவு ஏற்பட்டிருந்தாலும் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருந்தால் வெற்றி பெறுவீர்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தாலும் நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் முயற்சிகளை ஒரு தடவைக்கு, இரண்டு தடவை முயற்சி செய்தால்தான் வெற்றி அடைய வாய்ப்புள்ளது. போக்குவரத்து, வண்டி, வாகனங்களில் எச்சரிக்கையாக இருங்கள். எல்லாவிதமான தகவல் தொடர்பையும் கவனமாக கையாளுங்கள். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.
