2025 பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்கள் பணம், பொருள் மொத்தமாக முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும். கணவன் - மனைவி உறவு மகிழ்ச்சி சந்தோஷகரமாக இருக்கும். தொழில் பரவாயில்லாமல் இருக்கிறது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. யாருடைய பணமாவது உங்கள் கையில் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நன்மையாக இருந்தாலும், யாரையும் நம்பி செய்ய முடியாததாக இருக்கிறது. உயர்கல்வியில் பிரேக் இருக்கிறது. அம்மா மற்றும் அப்பாவுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் கொஞ்சம் காத்திருங்கள். ஷேர் மார்க்கெட் போன்ற எந்த யூக வணிகங்களில் முதலீடு செய்தாலும் சுமாரான அளவில் செய்யுங்கள். உங்களுக்கு ஓரளவு நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு நல்லதொரு லாபம், வருமானம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் சனி பகவான் மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 24 Feb 2025 5:32 PM IST
ராணி

ராணி

Next Story