2025 பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

யாருக்கும் தேவையில்லாமல் பணம் கடன் கொடுப்பது, வாங்குவது நல்லதல்ல. யாருக்கெல்லாம் பணம் கடன் கொடுத்தீர்களோ அதனால் பிரச்சினை, பகை, போராட்டம், மனக்குழப்பம், நிம்மதியற்ற சூழ்நிலைகள் உருவாகும். உங்கள் பணம், பொருள் மொத்தமாக முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கும். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. அரசு சார்ந்த அத்தனை விஷயங்களிலும் கவனமாக இருங்கள். தேவையற்ற மனக்குழப்பங்கள், நிம்மதியற்ற சூழல்கள் இருக்கிறது. இந்த வாரத்தில் உங்களை பற்றிய வீண் வதந்திகள் பரவிக்கொண்டே இருக்கும். தூக்கம் குறைய வாய்ப்புள்ளது. வீடு மாற்றங்கள் உண்டு. முற்றிலும் புதிய சூழ்நிலைகளில் வாழ்க்கை நடத்த வாய்ப்புகள் உள்ளது. உங்கள் மற்றும் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். புதிய முயற்சிகள் கை கொடுக்க வாய்ப்புகள் இல்லை. அதனால் தேவையில்லாத முயற்சிகள் எதுவும் வேண்டாம். நோய் மற்றும் கடன் குறைய வாய்ப்புள்ளது. தைரியம், தன்னம்பிக்கையை இழக்கக்கூடிய காலகட்டம் இருப்பதால் அவற்றில் கவனம் தேவை. இந்த வாரம் முழுவதும் சிவன் தரிசனம் மற்றும் நவகிரங்களில் இருக்கக்கூடிய சனி பகவானை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 11 Feb 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story