2025 பிப்ரவரி 04-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகளை பொறுத்தவரை வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் உண்டு. நீண்ட காலமாக கடன் இருப்பவர்களுக்கு கடன் குறைய வாய்ப்புள்ளது. வியாதியால் அவதிப்படுபவர்களுக்கு அதன் தாக்கம் குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத தெய்வ, ஆலய தரிசனம் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம்; அவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இவை அத்தனையும் நடக்கும். ஒரு பக்கம் பணம் முடங்குவதற்கான வாய்ப்பு, இன்னொரு பக்கம் வராத பணங்கள் வருவதற்கான சூழ்நிலைகள் என இரண்டுமே உள்ளது. உயர்கல்வியில் தடை ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்தால் போதுமானது. கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருந்தால் புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது; லாபம் இல்லை. இந்த வாரத்தை தெய்வ அனுகூலத்தால்தான் கடக்க வேண்டும். இந்த வாரம் முழுவதும் பைரவரை வழிபாடு செய்யுங்கள். வாய்ப்பிருந்தால் பூவராகப் பெருமாளை தரிசனம் செய்யுங்கள்.

Updated On 4 Feb 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story