2025 ஜனவரி 28-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் ஆசைப்படுவது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. அதற்காக முயற்சி செய்ய வேண்டிய சூழ்நிலைகள் உள்ளன. பணம், பொருள் வராமல் நிலுவையில் இருந்தால் வரும். நீண்ட நாட்களாக பென்ஷன், பிஎப், கிராஜுவிட்டி பணம் வராமல் இருந்தால் வரும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. அவர்களால் நடக்காத சுபகாரியங்கள் நடக்கும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். தொழிலில் கவனம் செலுத்துங்கள். கூட்டுத்தொழில் செய்தால் இருவரும் லாபம் அடைவீர்கள். மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்க வாய்ப்புள்ளது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். ஏற்கனவே கொடுத்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புள்ளது. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதில் நிறைய தடைகள் இருக்கின்றன. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீண்ட தூர பயணம் இருந்தால் தவிர்த்துவிடுங்கள். இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 28 Jan 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story