2025 ஜனவரி 21-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எதிர்பாராத பொருள் வரவு, தனவரவு இருக்கிறது. நிலுவையில் உள்ள பணங்கள் வந்து சேர வாய்ப்புள்ளது. கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். ஏனென்றால் அவை வெற்றிபெற வாய்ப்புகள் இல்லை. எதிர்பாராத பயணம்; அந்த பயணத்தால் பிரச்சினை; உறவுகளால் தேவையற்ற மன வருத்தம் ஆகியவை இருக்கிறது. அதனால் எப்போதும் யோசித்து செயல்படுங்கள். தொடர்புகொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்புகொள்ளுங்கள். நடந்து செல்வது, லிஃப்ட்மற்றும் எஸ்கலேட்டரில் செல்லும் போது கவனம் தேவை. உங்களை பற்றிய வீண்வதந்திகள் சுற்றும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. லாபம் சுமாராக இருக்கிறது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தை பாக்கியம் உண்டு. உங்கள் காதலில் போராட்டங்கள், பிரச்சினைகள் இருக்கிறது. தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.
