2024 டிசம்பர் 31-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. வருமானங்கள் பெரிய அளவில் இருக்கிறது. அதற்கு ஏற்ற செலவுகளும் இருக்கிறது. கடன் வாங்குவதை தவிருங்கள். குறிப்பாக, எல்லோருடனும் பேச்சை குறையுங்கள். நீண்ட நாட்களாக வராமல் இருக்கும் நிலுவைத் தொகை வந்து சேரும். முன்னோர்களுடைய சொத்துக்கள் கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவு, பணவரவு இருக்கிறது. இந்த வாரத்தில் உங்கள் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். எந்த அளவுக்கு முயற்சி மேற்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு வெற்றி பெறுவீர்கள். கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்களை டெவலப், அப்டேட் செய்யுங்கள். தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். மணவாழ்க்கையில் கணவன் - மனைவி உறவு மகிழ்ச்சி, சந்தோஷகரமாக உள்ளது. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவருக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. கடன் மற்றும் நோய் குறையும். இந்த வாரம் முழுவதும் பெருமாள் கோயிலில் இருக்கும் தாயார் குறிப்பாக, மகாலட்சுமி மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 31 Dec 2024 8:47 AM IST
ராணி

ராணி

Next Story