2024 டிசம்பர் 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கடன் கிடைக்கும். வேலை, வாய்ப்புகள் உங்களுக்கு ஏற்றம், முன்னேற்றத்தை கொடுக்கும். கடந்த காலங்களில் விட்டுப்போன காரியங்கள், எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறுவதற்கான சூழ்நிலைகள் என அத்தனையும் நன்மையாக முடியும். போட்டித் தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. கையில் பணம், தனம் இருக்கும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் என அனைத்தும் இருக்கிறது. விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் வேண்டாம். ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். டிஜிட்டல் கரன்சி, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றிலும் கவனம் தேவை. எல்லாமே லாபத்தை கொடுப்பது மாதிரியான தோற்றம். ஆனால், நமது பணம் முடங்க வாய்ப்புள்ளது. அரசியல் வாழ்க்கை ஏற்றம், முன்னேற்றத்தை கொடுக்கும். எதிரிகளை ஜெயிப்பதற்கான வாய்ப்புள்ளது. முன்னோர்களுடைய சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்பாராத பொருள் வரவு, தனவரவு உண்டு. சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டும் பரவாயில்லை. மணவாழ்க்கையும் நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள்.