2024 டிசம்பர் 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். எந்தவொரு முடிவு எடுப்பதற்கு முன்பாகவும் ஒரு தடவைக்கு, பல தடவை யோசித்து செயல்படுங்கள். எல்லாவிதத்திலும் நிதானமாக செயல்படுங்கள். உறவுகளால் தேவையற்ற பிரச்சினைகள், போராட்டங்கள், மனவருத்தங்கள் ஏற்பட்டு விலகும். இளைய சகோதர - சகோதரிகளாலும் பிரச்சினைகள் உண்டாகலாம். யாரையும் நம்பி எதையும் செய்யாதீர்கள். தேவையற்ற குழப்பங்கள், நிம்மதியற்ற சூழல்கள் ஏற்படும். கடன் மற்றும் நோயின் தன்மைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். கல்வி நன்றாக உள்ளது. வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். குழந்தைக்கான வாய்ப்புள்ளது. கணவன் - மனைவி உறவில் சண்டை சச்சரவுகள் இருக்கும். வேலை நன்றாக உள்ளது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். அரசு தொடர்பானவற்றில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள். உங்களை பற்றிய வீண் வதந்திகள் ஓடும். இந்த வாரம் முழுவதும் பைரவரையும், தன்வந்திரி பகவானையும் வழிபாடு செய்யுங்கள்.