2024 டிசம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

செவ்வாய் பகவான் வக்ர கதியில் இருந்தாலும், அவர் சனியுடைய நட்சத்திரத்தில் இருப்பதால் ஒருபக்கம் போராட்டம், பிரச்சினைகள் இருக்கிறது. தேவை இருந்தால் மற்ற விஷயங்களில் தலையிடுங்கள். இல்லையென்றால் தவிர்த்துவிடுங்கள். தைரியம், தன்னம்பிக்கை இருந்தாலும், எது முதலில், இரண்டாவது என்று யோசித்து செயல்படுங்கள். நிரந்தர சொத்து வாங்க வாய்ப்புகள் உள்ளன. வீடு, இடம் மாற நினைப்பவர்களுக்கு நிறைய போராட்டம் இருக்கிறது. சொத்து வாங்குபவர்கள் டாக்குமெண்ட்ஸை நன்றாக ஆராய்ந்து வாங்குங்கள். முடிந்தவரை பயணம் செய்வதை தவிருங்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். எல்லாவற்றிலும் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. வேலையில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் இருக்கிறது. உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு தர வாய்ப்பு இல்லை. உடன் பணியாற்றுபவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் இருக்கிறது. தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னருக்காக உழைப்பீர்கள். எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள். கடன் சுமை ஏதோவொரு விதத்தில் குறையும். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் பைரவரை தரிசனம் செய்யுங்கள்.

Updated On 10 Dec 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story