2024 டிசம்பர் 03-ஆம் தேதி முதல் டிசம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தொழில் பரவாயில்லை. நஷ்டம், லாபம் இரண்டுமே இல்லை. வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. உடல், உழைப்பு சார்ந்த மாத சம்பளம் வாங்குவர்களுக்கு நல்லதொரு ஏற்றம் கொடுக்கும் வாரமாக இருக்கிறது. வேலையில், உங்களின் கடின முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்க வாய்ப்புள்ளது. வீடு மாற வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நீங்களும் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். மதத்தின் மீது பற்று ஈடுபாடு அதிகரிக்கும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். இதில் இருந்து லாபம் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. பணம், பொருள் முடங்கலாம். அதனால் எல்லா யூக வணிகங்களிலும் கவனம் தேவை. புதிய முயற்சிகள் எதுவும் பெரிய அளவில் வேண்டாம். பிசினஸில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பைரவரை வழிபாடு செய்யுங்கள்.
