2024 நவம்பர் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத தைரியம், தன்னம்பிக்கை வந்துவிடும். இதுவரை சந்தேகப் பார்வையோடு இருந்த நீங்கள் இப்பொழுது தெளிவான சிந்தனை, தெளிவான முடிவை நோக்கி செல்வீர்கள். அதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்ற தெளிவான சிந்தனைக்கு வந்துவிடுவீர்கள். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், என்டெர்டெயின்மென்ட், டூர், டிராவல் ஆகியவை இருக்கிறது. கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து கிடைக்கும். வருமானங்களும் நன்றாக இருக்கிறது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிஜிட்டல் கரன்சி, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் சுமாரான அளவில் முதலீடு செய்யுங்கள். விட்டதை பிடிக்க ஆசைப்பட வேண்டாம். சுபகாரியங்கள் நடைபெறும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத தெய்வ தரிசனம் இருக்கிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் உங்கள் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். உங்கள் எதிரிகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. நிலுவையில் உள்ள பணங்கள் வந்து சேரும். முன்னோர்களின் சொத்துக்கள் கிடைக்கும். கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள் வரவு, தனவரவு இருக்கிறது. மேலும், பென்ஷன், கிராஜுவிட்டி, அரியர்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவை வராதவர்களுக்கு வரும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். ஆண் நண்பர்களால் நற்பலன்கள் உண்டு. இந்த வாரம் முழுவதம் பைரவருடைய வழிபாடு முக்கியம்.

Updated On 12 Nov 2024 10:28 AM IST
ராணி

ராணி

Next Story