2024 அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

மூத்த சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. பெண் நண்பர்களாலும் நற்பலன்கள் இருக்கிறது. பொருளாதார பிரச்சினைகள் ஏதும் இல்லை. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நன்மையாக முடியும். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் பெரிய அளவில் டெவலப் ஆகும். இந்த வாரத்தில் உங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் சந்திப்பீர்கள். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், எதிர்பாராத என்டெர்டெயின்மென்ட், டூர், டிராவல் ஆகியவை இருக்கிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு, அவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இவை அனைத்தும் இந்த வாரம் உண்டு. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை சும்மா இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. உங்கள் வேளையில் இதுவரை இருந்த கஷ்டங்கள் நீங்கி எளிமையாகவும், சந்தோஷமாகவும் பணியாற்ற கூடிய வரமாக அமையும். சொந்த தொழில் சுமார். ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் பிசினஸ் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இரண்டாம் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளது. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். அதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். இந்த வாரத்தில் எதிர்பாராத பணவரவு, பொருள் வரவு, தனவரவு ஆகியவை இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், பைரவரையும், தன்வந்திரி பகவானையும் தரிசனம் செய்யுங்கள்.

Updated On 28 Oct 2024 11:05 PM IST
ராணி

ராணி

Next Story