2024 அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
அஷ்டமத்து சனி இருக்கிறது என்று பயப்பட வேண்டாம். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. இடம், வீடு, மனை வாங்க வேண்டும்; ஊர் மாற வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலை சுமாராக உள்ளது. தனித்துவமாக தெரிய வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் வேலையில் மிகவும் கவனமாக இருங்கள். ஏனென்றால் நீங்கள் பார்க்கும் வேலையை விட்டு வெளியே செல்லும் அல்லது வெளியேற்றப்பட வேண்டிய காலம். அதனால் எந்த துறையில் பணியாற்றினாலும் உங்கள் வேலையில் பொறுமை, நிதானம் அவசியம். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மணவாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் இருக்கும். பெரிய அளவில் தொழில் செய்தால் அது லாபகரமாக இருக்க வாய்ப்பில்லை. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் முதலீடு செய்யுங்கள்; நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றி அடைவது போன்ற தோற்றம்; ஆனால், சுமாரான பலன்கள்தான் உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. வருமானம் சுமார். இந்த வாரம் முழுவதும், பைரவரையும், ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்யுங்கள்.
