2024 அக்டோபர் 08-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் பரவாயில்லை. பெரிய அளவில் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். நெருங்கிய உறவுகளால் பிரச்சினைகள், மனவருத்தங்கள் ஏற்பட்டு விலகும். அவர்களை விட்டு நீங்களும்; உங்களை விட்டு அவர்களும் பிரிந்து இருக்க வேண்டிய காலங்கள் இருக்கிறது. இதேதான் உங்களது இளைய சகோதர - சகோதரிகள் விஷயத்திலும் இருக்கிறது. இந்த வாரத்தில் யாரை நம்புவது; நம்ப வேண்டாம் என்ற மனநிலை, சூழ்நிலை உருவாகும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு துரோகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். நீங்கள் பெரிய அளவில் தொடர்பு கொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். இடைத்தரகர்கள் வேண்டாம். அதுவே உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. ஆனால், லாபம் இல்லை. அரசியல் வாழ்க்கை ஏற்றம் மிகுந்ததாக இருக்கும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள், கேடயங்கள் கிடைக்கும். உங்கள் சர்வீஸ் அதாவது வேலையை பொறுத்தவரை கொஞ்சம் கவனமாக இருங்கள். வேலையில் பணிச்சுமை, டென்ஷன் என்பது இருக்கும். யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீர்கள். அது திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. கணவன் மனைவி உறவும் சுமாராகத்தான் இருக்கிறது. மூத்த சகோதரர்களால் பிரச்சினை என்பது இருந்துகொண்டே இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், பைரவரையும், ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்யுங்கள்.
