2024 செப்டம்பர் 03-ஆம் தேதி முதல் செப்டம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், பொருள் இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஏதோவொரு விதத்தில் வெற்றிபெறும். எண்ணங்கள் ஈடேறும். நீங்கள் நினைப்பது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரத்தில் வீடு, இடம், ஊர் மாற நினைத்தவர்களுக்கு நிச்சயமாக மாற்றங்கள் உண்டு. உறவுகள் மற்றும் இளைய சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி இருக்கிறது. எதிர்கால வளர்ச்சிகளுக்கான யோசனை கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல விற்பனை மற்றும் வருமானம் இருக்கிறது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சுமாராக இருப்பதால் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் ஆகியவை செய்பவர்களுக்கு எல்லா தொழில்களுமே நன்றாக உள்ளது. சொந்த தொழிலும் நன்றாக உள்ளது. அதிலும் லாபம் கிடைக்கும். வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. ஏதோவொரு வேலை இருந்துகொண்டே இருக்கும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சிக்கலாம். கணவன் - மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள், சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் இருக்கும். இந்த வாரம் முழுவதும் முருகனையும், சிவனையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 9 Sept 2024 9:53 PM IST
ராணி

ராணி

Next Story