2024 ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கடந்த காலங்களில் இருந்த மனக்குழப்பங்கள் நீங்கி, இந்த வாரத்தில் தெளிவான சிந்தனை மற்றும் முடிவுக்கு வருவீர்கள். சில விஷயங்களை துணிந்து செயல்படுத்தி அதில் வெற்றியும் பெறுவீர்கள். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். நல்லதொரு முன்னேற்றம் இந்த வாரத்தில் இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஓரளவு வெற்றியடையும். யாரை நம்பியிருக்கிறீர்களோ அவர்கள் உங்களின் நம்பிக்கைக்குரியவர்கள் ஆவார்கள். தொடர்புகொள்ள நினைப்பவர்களை நீங்களே நேரடியாக தொடர்புகொள்ளுங்கள். நன்மையான காலகட்டங்கள் நடைபெறும் பொழுது அந்த வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இளைய சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், நெருங்கிய உறவுகளால் நற்பலன்கள் உண்டு. ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற எந்த துறையாக இருந்தாலும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். வருமானம் வரும் என்பதற்காக கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். எப்போதும் போன்றே செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள். வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வெற்றி பெறுவீர்கள். உங்களின் முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். லோன் எதிர்பார்த்தால் கிடைக்கும். புதிய காதல் விஷயங்கள் வெற்றியை தரும். இந்த வாரம் முழுவதும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வார் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பைரவரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 5 Aug 2024 10:31 PM IST
ராணி

ராணி

Next Story