மாதம் முழுவதும் அஷ்டம சனி இருந்தாலும் கூட தர்ம கர்மாதிபதி யோக அமைப்பில் பத்தாமிடத்தில் குருவும், தன ஸ்தானத்தில் செவ்வாயும் இருப்பது செலவுக்கேற்ற வரவுகள் இருக்கும். அஷ்டம சனி இருப்பதால் இளைஞர்கள் பேச்சில் கவனம் கொள்வது நல்லது. சிறு உடல் நலக் குறைவுகள் ஏற்பட்டாலும் உடனடியாக கவனித்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு மிகச்சிறந்த நன்மைகள் உண்டு. வெளிநாடு, வெளிமாநிலம் செல்ல விரும்புவோருக்கு அனுமதிகள் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரகாரர்களுக்கு மனத்தைரியம் ஏற்படும். ஆரம்பத்தில் பொருளாதாரப் பிரச்சனைகள் இருந்தாலும் மாதத்தின் இறுதியில் மிகப்பெரும் நன்மைகள் தருவதாக அமைந்திருக்கிறது.

Updated On 12 July 2023 1:06 PM IST
ராணி

ராணி

Next Story