2024 ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். நீங்கள் நினைப்பது நடக்கும். யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். கையில் பணம், பொருள் இருக்கும். எதிர்பாராத பயணம் அல்லது நீண்ட தூரம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலே படிப்பதற்கான வாய்ப்பு, உயர்கல்வி ஆகியவை நன்றாக உள்ளது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். இடம், வீடு, வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். வேலை தேடுபவர்களுக்கு அனுபவத்துக்கு தகுந்த, படிப்புக்கு தகுந்த வேலை கண்டிப்பாக கிடைக்கும். நல்ல வேலையாட்களை எதிர்பார்த்தால் அமைவார்கள். தேர்வுகள் எழுதி ரிசல்ட் எதிர்பார்த்தால் தேர்ச்சி பெறுவீர்கள். நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டிருந்தால் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டும் சிறப்பாக இல்லை. கணவன் அல்லது மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு பிரிவு, விரயம், நஷ்டம், வைத்தியச் செலவுகள் ஆகியவை இருக்கிறது. பெரிய அளவில் முதலீடு ஏதும் செய்வதாக இருந்தால் பார்த்து செய்யுங்கள். உங்கள் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த வாரம் முழுவதும், பைரவரையும், ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்யுங்கள்.