2024 ஜூலை 16-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், என்டெர்டெயின்மென்ட் இருந்துகொண்டே இருக்கும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி ஆகியவையும் இருக்கிறது. கையில் பணம், தனம் இருந்தால்கூட இந்த வாரம் தாராளமாக செலவு செய்வதற்கான சூழ்நிலைகள் உள்ளன. நிரந்தரமான சொத்துக்களை வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இந்த வாரம் உண்டு. செய்யும் வேலையை திருப்தியோடு செய்யுங்கள். பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட்டு வெளியே வர வேண்டிய காலம், ஏதோவொரு வகையில் வெளியேற்றப்பட வேண்டிய காலம் அல்லது அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் இதெல்லாமே இருக்கிறது. வேலையில் முயற்சி எடுத்து செய்தால் மட்டுமே உங்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்காதீர்கள். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன் ஷிப் ஆகியவற்றிற்கு விண்ணப்பித்திருந்தால் இந்த வாரம் வரும். சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டிலும் பெரிதாக லாபம் இல்லை. மணவாழ்க்கை ஓரளவு மகிழ்ச்சி, சந்தோஷகரமானதாக இருக்கும். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் ஏற்படும். நீண்டதூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் சிவன் தரிசனம் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 22 July 2024 10:48 PM IST
ராணி

ராணி

Next Story