2024 பிப்ரவரி 20 முதல் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு கூடும். நீண்ட நாட்களாக இடம், வீடு, பொருட்கள், வாகனங்கள் வாங்க நினைப்பவர்களுக்கு ஏற்ற காலமாக இருக்கும். உற்பத்தி துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனைக்கு தகுந்த லாபம் இருக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். அம்மாவால் நன்மைகள் ஏற்படும். புதிய காதல் மலரும். பிரிந்த காதல் சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம், சம்பள உயர்வு, பணி உயர்வு போன்றவை இருக்கும். மேலும் பணியில் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். வழக்குகளில் ஜெயிப்பீர்கள். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். வங்கி கடனுக்கு முயற்சித்திருந்தால் கிடைக்கும். அரசு மற்றும் போட்டி தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி கிடைக்கும். நண்பர்களால் சந்தோஷம், மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டாகும். துர்கை அல்லது காளியின் வழிபாடு மற்றும் விநாயகர் தரிசனம் மகிழ்ச்சியை தரும்.
