2024 செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நன்மையாகவே முடியும். அதிலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சற்று கடினமாக இருந்தால்கூட ஜெயிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் முழுவதுமே வேலையில் கவனம் செலுத்துங்கள். இன்டர்வியூவில் கலந்துகொண்டு இருந்தால் தேர்வு ஆவதற்கான சூழல்கள் உள்ளன. உங்கள் வேலையில் முயற்சிகள் எடுத்து செய்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. வேலை மூலமாக எதிர்பார்த்த நன்மைகள் கிடைப்பதற்கான கிரக நிலைகள் இருக்கின்றன. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளது. தொழில் பரவாயில்லாமல் இருக்கும். அதிலும் சுய தொழில் செய்பவர்கள் முதலீடு செய்தால்தான், பின்னாளில் நல்ல ரிட்டன்ஸ் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அதனால், வசதி இருந்தால் தொழிலில் முதலீடு செய்யுங்கள். மணவாழ்க்கை பரவாயில்லாமல் இருக்கிறது. நட்பு வட்டாரம் ஏதோவொரு விதத்தில் உதவிகரமாக இருக்கும். மேலும் உங்களின் நட்பால் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத நன்மைகள் இரண்டுமே நடக்கும். வாரம் முழுவதும் முழுமுதற் கடவுள் விநாயகரையும், துர்க்கையையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 24 Sept 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story