2024 ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுடைய பொருளாதார நிலைகள் நன்றாக இருக்கிறது. கையில் பணம், தனம், பொருள் என்பது இருந்துகொண்டே இருக்கும். பேச்சின் மூலமாக நல்ல வருமானத்தை சம்பாதிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக முடியும். உங்களுடைய இளைய சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. சொத்துக்கள் விற்பனை ஆகாமல் இருந்தால் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். உடல் உழைப்பு இல்லாமல் சம்பாத்தியம் செய்ய நினைப்பீர்கள். வேலையை பொறுத்தவரை தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. நீங்கள் பார்க்கும் வேலையை விட்டு விடலாமா? அல்லது வேறு வேலை தேடலாமா? என்ற சூழல் உருவாகும். அதை பற்றி யோசிக்க வேண்டாம். இருக்கும் வேலையை நல்ல விதமாக செய்யுங்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். திருப்தியற்ற மனநிலையோடு எந்த வேலையையும் செய்யாதீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். கடன் கிடைக்கவும் வாய்ப்புகள் இல்லை. நோயால் அவதிப்பட்டால் அவை தீர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொந்த தொழிலில் தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. கூட்டுத்தொழில், திருமண வாழ்க்கை இரண்டிலும் திருப்தியில்லாத மனநிலையில்தான் இருப்பீர்கள். இந்த வாரம் முழுவதும் முருகன், துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள். இன்னும் முன்னேற்றம் ஏற்படும்.

Updated On 23 July 2024 4:23 AM GMT
ராணி

ராணி

Next Story