2024 ஜூலை 16-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வீடு, இடம் வாங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிக்க வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இருக்கிறது. இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். நீங்கள் யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். வேலையின் நிமித்தமாக எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மிழச்சி, நன்மைகள் அனைத்தும் இருக்கிறது. வேலை நன்றாக உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் எதிர்பார்க்கக்கூடிய முன்னேற்றங்கள் உண்டு. உடன் பணியாற்றுபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். சொந்தமாக தொழில் செய்தால் அத்தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். திருமண வாழ்க்கையை பொறுத்தவரை பரவாயில்லை. இரண்டாம் திருமணம் செய்ய நினைப்பவர்கள் முயற்சி செய்யலாம். இந்த வாரத்தில் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் தொடங்கலாம். நட்பு வட்டாரம் பெரிய அளவில் டெவலப் ஆகும். நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. மூத்த சகோதர - சகோதரிகளால் முன்னேற்றங்கள் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 16 July 2024 3:34 AM GMT
ராணி

ராணி

Next Story