2025 ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பாகவும் நன்கு யோசித்து செயல்படுங்கள். அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானங்கள் நிறைய இருந்தாலும் அதனை மீறிய செலவினங்களும் இருக்கிறது. எல்லாவிதத்திலும் பொறுமையாவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை பொறுத்தவரை பொறுமை, நிதானமாக இருங்கள். ஏனென்றால் உங்கள் வேலையில் நிறைய பிரச்சினைகள், போராட்டங்கள் இருக்கின்றன. அப்பா மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தொழில் செய்பவர்கள் உங்கள் தொழிலில் முதலீட்டை பார்த்து செய்யுங்கள். வேலை, தொழில் என அனைத்திலும் பிரச்சினைகள் இருப்பதால் எல்லாவற்றிலும் பொறுமையாக இருங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு உங்களுக்கான புகழ், அந்தஸ்து கூடும். பாஸ்போர்ட், விசா, பி.ஆர்., கிரீன் கார்டு வராதவர்களுக்கு வரும். பணம் பொருள் முடங்க வாய்ப்பு உள்ளது. அதனால் எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள். இந்த வாரம் முழுவதும், உங்களின் இஷ்ட தெய்வம், குலதெய்வத்தோடு, மகாலட்சுமியையும், சிவனையும் வழிபாடு செய்யுங்கள்.
