2025 ஏப்ரல் 08-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களிடம் பணவசதி இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். மிகவும் நல்லது. உங்கள் கையில் பணம், தனம், பொருள் இருந்தாலும் அதற்கு தகுந்த செலவுகளும் இருப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. இந்த வாரத்தில் எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு தேவையற்ற விரயங்கள், வைத்தியச் செலவுகள் இருக்கிறது. எந்த விஷயத்திலும் அசால்ட்டாக இல்லாமல் அலர்ட்டாக இருங்கள். வேலை வாய்ப்புகளை பொறுத்தவரை நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. வேலையில் பிரஷர், டென்ஷன், அழுத்தம் ஆகியவை அதிகமாக இருக்கும். சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டும் நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும், ஆஞ்சநேயரையும், சனி பகவானையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 8 April 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story