2025 ஏப்ரல் 01-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. இடம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைத்தவர்களுக்கு உங்கள் எண்ணங்கள் ஈடேறும் வாரமாக இருக்கும். கல்விக்கான வாய்ப்பும் நன்றாக உள்ளது. புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்து காத்திருந்தால் அது தொடர்பான தகவல்கள் வரும். வேலை, வாய்ப்புகளை பொறுத்தவரை எந்த வேலையில் இருந்தாலும் கவனம் செலுத்துங்கள். உங்கள் வேலையில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டு. தொழில் பரவாயில்லை. உங்கள் தொழிலில் எதிர்பார்த்த லாபம், வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும், சிவன் கோயில்களில் இருக்கும் அம்பாளையும், குறிப்பாக முழுமுதற் கடவுள் விநாயகரையும் வழிபாடு செய்யுங்கள்.
