2025 மார்ச் 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இறைவனுடைய அனுகிரகம், அனுகூலம் பரிபூரணமாக இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். வாய்ப்பு இருந்தால், பண வசதி இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் தேவையற்ற செலவுகள், விரயங்கள், வைத்தியச் செலவுகளை சந்திக்க வேண்டி வரும். உறவுகளால் செலவினங்கள், பிரச்சினைகள், போராட்டங்கள், மனவருத்தங்கள் உண்டு. நெருங்கிய உறவுகளை பிரிந்து இருக்க வேண்டிய காலகட்டங்கள் இருக்கிறது. வரவுகளுக்கு ஏற்ற செலவுகள் அதிகமாக இருக்கிறது. வேலை, வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. வேலையில் நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. எந்த துறையில் பணியாற்றினாலும் நல்லது நடக்க வாய்ப்புள்ளது. தொழில் பரவாயில்லை. வாய்ப்பு இருந்தால் தொழிலில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் செய்யும் முதலீடுக்கான ரிட்டன்ஸை எடுக்கும் வாரமாக உள்ளது. பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன் ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். இந்த வாரம் முழுவதும், உங்களின் இஷ்ட தெய்வம், குலதெய்வம் என அனைத்தையும் வழிபாடு செய்யுங்கள்.
