2025 மார்ச் 18-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். வெளியூர், வெளிமாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நன்றாக உள்ளது. பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நண்பர்களால் உங்கள் வாழ்க்கையில் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், ஆன்லைன் பிசினஸ், டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அதனால், சுமாரான அளவிலேயே முதலீடு செய்யுங்கள். ஓரளவு ரிட்டன்ஸ் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து இருக்கிறது. வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. பிசினஸ் செய்பவர்களுக்கும் நன்றாக இருக்கிறது. தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி மற்றும் சிவன் கோயிலில் இருக்கும் அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.
