2025 மார்ச் 11-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. நீங்கள் நம்பியவர்களால் நற்பலன்கள் ஏற்படும். ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றியடையும். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில் பிரச்சினைகள் இருந்தாலும் அதை பற்றிய பயம் தேவையில்லை. குழந்தைகள் இருந்தால் அவர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். தொழில் பரவாயில்லை. உங்கள் தொழிலில் சுமாரான முதலீடே செய்தாலும் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு அது நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அல்லது அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இந்த வாரம் முழுவதும், உங்களின் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். தெய்வ அனுகூலத்தை கூட்டுங்கள்.

Updated On 17 March 2025 5:10 PM IST
ராணி

ராணி

Next Story